டென்னிஸ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப்: அமெரிக்க வீரர் பென் ஷெல்டன் 2-வது வெற்றி

டென்னிஸ் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பென் ஷெல்டனை வென்றது குறிப்பிடத்தக்கது.

ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பென் ஷெல்டன், ரபெல் ஜோடரை வீழ்த்தி 2-வது வெற்றியை தன்வசப்படுத்தினார்.

உலகின் டாப்-8 வீரர்கள் மட்டும் பங்கேற்றுள்ள ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் துரின் நகரில் நடந்து வருகிறது. வீரர்கள் ஜான் மெக்கன்ரோ, இவான் லென்டில் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனர்.

ஜான் மெக்கன்ரோ பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ரபெல் ஜோடரை (ஸ்பெயின்) எதிர்கொண்டார். 2 மணி 6 நிமிடம் நடந்த விறுவிறுப்பான ஆட்டத்தில் பென் ஷெல்டன் 7-6 (10-8), 7-5 என்ற நேர் செட்டில் ரபெல் ஜோடரை வீழ்த்தி 2-வது வெற்றியை தன்வசப்படுத்தினார். ஏற்கனவே ஒரு தோல்வி கண்டு இருந்தார். தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்த ரபெல் ஜோடர் அரை இறுதி வாய்ப்பை இழந்தார். அரைஇறுதிக்கு தகுதி பெற்று விட்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்துல் பில்சுடன் (பிரான்ஸ்) மோதுகிறார். இதில் ஆர்துல் பில்ஸ் நேர்செட்டில் அலெக்சாண்டர் ஸ்வெ ரேவை வீழ்த்த தவறினாலே பென் ஷெல்டன் அரைஇறுதிக்கு தகுதி பெற்று விடுவார்.

முந்தைய நாளில் இவான் லென்டில் பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் அமெரிக்க வீரர் பிரான் சிஸ் டியாபோ 7-6 (8-6), 6-0 என்ற நேர்செட்டில் பிளாவியோ கோபோலியை (இத்தாலி) தோற்கடித்து முதல் வெற்றியை பதிவு செய்தார்.

டென்னிஸ் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் அலெக்சாண்டர் ஸ்வரேவ், பென் ஷெல்டனை வென்றது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT