டென்னிஸ்

ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் - அரையிறுதியில் ஸ்வரேவுடன் மோதும் மெத்வதேவ்

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்று வருகிறது.

டூரின் ,

டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வரேவுடன் டேனில் மெத்வதேவ் மோதுகிறார்.

மெத்வதேவ்

உலகின் டாப்-8 முன்னணி வீரர்கள் பங்கேற்கும் ஏ.டி.பி. இறுதிச்சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபெவை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பாக விளையாடிய மெத்வதேவ் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதியில் முன்னணி வீரர்கள்

ஏற்கனவே ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் மற்றும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

இன்று நடைபெறும் முதல் அரையிறுதியில் கார்லோஸ் அல்காரஸ் - பென் ஷெல்டன் மோதுகின்றனர். மற்றொரு அரையிறுதியில் நாளை அதிகாலை அலெக்சாண்டர் ஸ்வரேவ் - டேனில் மெத்வதேவ் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

SCROLL FOR NEXT