டூரின்,
ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க ஆட்டங்களில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
உலகின் முன்னணி 8 வீரர்கள் பங்கேற்கும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த குழுச் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ஸ்பெயினின் ரபேல் ஜோடாரை எதிர்கொண்டார்.
தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஸ்வெரேவ், 6-4, 6-4 என்ற நேர் செட்களில் ஜோடாரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், பிரான்சின் ஆர்தர் பில்சுடன் மோதினார். முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் ஷெல்டன் கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் பில்ஸ் 6-3 என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்தார்.
இதனால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 6-3 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றிய ஷெல்டன், 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் ஸ்வெரேவ், ஷெல்டன் இருவரும் தங்களது பயணத்தை வெற்றியுடன் தொடங்கினர்.