டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

மெல்போர்ன்,

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர். ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.

இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று நடைபெற்றன. முதல் போட்டியில் 1-ம் நிலை வீரரான ஸ்பெயினைச் சேர்ந்த அல்காரஸும், 3-ம் நிலை வீரரான ஜெர்மனியைச் சேர்ந்த ஸ்வரேவும் மோதினர்.

முன்னணி வீரர்கள் இருவரும் மோதியதால் ஆட்டத்தில அனல் பறந்தது. இறுதியில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-4, 7(7)-6(3), 6(3)-7(7), 6(4)-7(7), 7-5 என வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.