டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி அளித்து அல்காரஸ் சாம்பியன்

ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் உடன் செர்பிய வீரர் ஜோகோவிச் விளையாடினார்.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் உடன் உடன் செர்பிய வீரர் ஜோகோவிச் விளையாடினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தி அபாரமாக விளையாடிய கார்லோஸ் அல்காரஸ் 2-6, 6-2, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.இதன்மூலம் இளம்வயதில் 7 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் என்ற புதிய சாதனையை கார்லோஸ் அல்காரஸ் படைத்துள்ளார் .