மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி தொடர். ஒவ்வோர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறும். இதன்படி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் கடந்த 18-ந்தேதி இந்த டென்னிஸ் போட்டி தொடர் தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி வரை போட்டிகள் நடைபெறும்.
இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் நடப்பு சாம்பியனும், 2-ம் நிலை வீரருமான ஜானிக் சினெர் (இத்தாலி), 10 முறை சாம்பியனும், தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான நோவக் ஜோகோவிச்சுடன் (செர்பியா) மோதினார்.
பலம் வாய்ந்த வீரர்கள் மட்டையை சுழட்டியதால் இந்த ஆட்டத்திலும் அனல் பறந்தது. முடிவில் ஜோகோவிச் 3-6, 6-3, 4-6, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சினெரை வெளியேற்றி 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.