டென்னிஸ்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மேடிசன் கீஸ் எளிதில் வெற்றி

கீஸ் முதல் சுற்று ஆட்டத்தில் ஆன் லி உடன் மோதினார்.

மெல்போர்ன்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சக நாட்டவரான ஆன் லி உடன் மோதினார்.

இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் 2-வது சுற்றில் எலெனா-கேப்ரியெலா ரூஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

SCROLL FOR NEXT