கோப்புப்படம்  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் தோல்வி கண்ட மேடிசன் கீஸ்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான மேடிசன் கீஸ் (அமெரிக்கா), டென்மார்க்கின் கிளாரா டவுசன் உடன் மோதினார்.

இந்த மோதலில் எளிதில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறுவார் என எதிர்பார்க்கப்பட்ட மேடிசன் கீஸ் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் 1-6, 4-6 என்ற செட் கணக்கில் கிளாரா டவுசனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT