Image Courtesy: X (Twitter) / File Image  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: ஒசாகாவை வீழ்த்தி சாம்பியனான விக்டோரியா எம்போகோ

இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான நவோமி ஒசாகா (ஜப்பான்), கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 6-2 என்ற புள்ளிக்கணக்கில் ஒசாகா கைப்பற்றினார். தொடர்ந்து நடைபெற்ற 2வது மற்றும் 3வது செட்களில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய விக்டோரியா எம்போகோ 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நவோமி ஒசாகாவுக்கு அதிர்ச்சி அளித்தார்.

இதன் மூலம் 2-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் ஒசாகாவை வீழ்த்தி விக்டோரியா எம்போகோ சாம்பியன் பட்டத்தை வென்றார்.