கோப்புப்படம்  
டென்னிஸ்

கனடா ஓபன் டென்னிஸ்: பென் ஷெல்டன் அரையிறுதிக்கு முன்னேற்றம்

கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது.

டொராண்டோ,

பல முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள கனடா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டொராண்டோ நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.

இந்த மோதலில் தொடக்கம் முதலே அபாரமாக செயல்பட்டு ஆதிக்கம் செலுத்திய பென் ஷெல்டன் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். தோல்வி கண்ட டி மினார் தொடரில் இருந்து வெளியேறினார்.

SCROLL FOR NEXT