டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்தியாவின் வைஷ்ணவி தோல்வி

மோயுகா உசிஜிமாவை (ஜப்பான்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

சென்னை,

3-வது சென்னை ஓபன் பெண்கள் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் போலந்தின் மாக்டா லினெட் 7-6 (5), 6-0 என்ற நேர் செட்டில் மோயுகா உசிஜிமாவை (ஜப்பான்) தோற்கடித்து கால்இறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர் 3-6, 0-6 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அனஸ் டசியா ஜகரோவாவிடம் தோல்வியை தழுவினார். ஸ்டெபானினி (இத்தாலி), மை ஹோன்டாமோ (ஜப்பான்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இரட்டையர் முதலாவது சுற்றில் இந்தியாவின் மாயா- ஸ்ரீவள்ளி பாமிதிபதி ஜோடி 6-3, 6-2 என்ற நேர் செட்டில் செக்குடியரசின் குக்மோவா-லபவுட்கோவா இணையை வெளியேற்றி கால்இறுதியை எட்டியது.

SCROLL FOR NEXT