சென்னை,
5-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி நுங்கம்பாக் கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா) 7-6(1), 6-1 என்ற நேர் செட்டில் ஜோவன்னா கார்லாண்டை (சீனதைபே) தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார்.
இரவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் தமிழக இளம் வீராங்கனை மாயா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்காவை வீழ்த்தி முதல்முறையாக கால்இறுதியை எட்டினார். இதன் மூலம் 2012-ம் ஆண்டு சானியா மிர்சாவுக்கு பிறகு டபிள்யூ.டி.ஏ. டூர் டென்னிஸ் தொட ரில் கால்இறுதியை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். உலக தரவரிசையில் 669-வது இடம் வகிக்கும் 17 வயதான மாயா அடுத்து மான்ட்கோமேரியை (அமெரிக்கா)எதிர்கொள்கிறார்.
இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி அத்கர்-ருதுஜா போசேல் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில் இங்கிலாந்தின் மேட் லினி புரூக்ஸ்- அமெலியா ரோஜகி இைைணய வீழ்த்தி கால்இறுதிக்கு முன் னேறியது. அதே சமயம் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ஜப்பானின் ஹிரோகா குவாட்டா ஜோடி 1-6, 1-6 என்ற நேர் செட்டில் கேப்ரியல்லா பிக் (ஆஸ்திரேலியா)-குலாம்பயேவா (கஜகஸ்தான்) இணையிடம் சரண் அடைந்தது.