டென்னிஸ்

சென்னை ஓபன் டென்னிஸ்: 4 பேருக்கு ‘வைல்டு கார்டு’

இந்த போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகை யில் 4 வீராங்கனைகளுக்கு 'வைல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

3-வது சென்னை ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. ஸ்டேடியத்தில் நடக்கிறது. ஜேனிஸ் டிஜென் (இந்தோனேசியா). யுலியா புதின்சேவா (கஜகஸ்தான்). தாட்ஜனா மரியா (ஜெர்மனி). மாக்டா லினெட் (போலந்து) உள்பட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இந்த நிலையில் இந்த போட்டியில் நேரடியாக பிரதான சுற்றில் ஆடும் வகை யில் 4 வீராங்கனைகளுக்கு 'வைல்டு கார்டு' சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந் தியாவின் வைஷ்ணவி அட்கர், சஹஜா யமாலபள்ளி, மாயா மற்றும் அமெரிக் காவின் கேத்ரினே ஹய் ஆகியோர் வைல்டு கார்டு பெற்றுள்ளனர். 17 வய தான மாயா கோவையைச் சேர்ந்தவர் ஆவார்.

SCROLL FOR NEXT