டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன்

சிறப்பாக விளையாடிய பிரிட்டிஷ் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

புதுடெல்லி,

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்றது.

இந்நிலையில், ஆண்கள் இரட்டையர் பிரிவில் பிரிட்டிஷைச் சேர்ந்த ஜூலியன் கேஷ்-லாயிட் கிளாஸ்பூல் ஜோடி, நெதர்லாந்தின் சாண்டர் அரெண்ட்ஸ்-டேவிட் பெல் ஜோடி உடன் மோதியது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிரிட்டிஷ் ஜோடி 6-3, 3-6, 10-6 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

சீனா ஓபன் டென்னிசில் ஆண்கள் இரட்டையரில் பட்டம் வெல்லும் முதல் பிரிட்டிஷ் ஜோடி இவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT