டென்னிஸ்

சீன ஓபன் டென்னிஸ்: மிரா ஆன்ட்ரீவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

அவர் அரைஇறுதியில் பார்துன்கோவாவை சந்திக்கிறார்.

பீஜிங்,

சீன ஓபன் டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டத்தில் செக்குடியரசின் நிகோலா பார்துன்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான கரோலினா முச்சோவாவை தோற்கடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் பிரெஞ்சு ஓபன் சாம்பி யனான ரஷியாவின் மிரா ஆன்ட்ரீவா 7-6 (7-4), 7-6 (7-3) என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எகதெரினா அலெக் சாண்ட்ரோவாவை சாய்த்தார். அவர் அரைஇறுதியில் பார்துன்கோவாவை சந்திக்கிறார்.

SCROLL FOR NEXT