டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ்: ஒசாகா, மிர்ரா ஆண்ட்ரீவா அசத்தல்... 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.

பீஜிங்,

சாீனா ஓபன் டென்னிஸ் தொடரில் 4-வது சுற்றுக்கு மிர்ரா ஆண்ட்ரீவா, நவோமி ஒசாகா முன்னேறியுள்ளனர்.

சீனா ஓபன் டென்னிஸ்

சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறி வருகின்றனர்.

ஒசாகா போராடி வெற்றி

பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் ஜப்பானின் நவோமி ஒசாகா, செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஒசாகா, 7-6 (7-4), 6-4 என்ற நேர் செட்களில் சாரா பெஜ்லெக்கை வீழ்த்தினார்.

இதன் மூலம் நவோமி ஒசாகா சீனா ஓபன் தொடரின் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

மிர்ரா ஆண்ட்ரீவாவும் வெற்றி

மற்றொரு 3-வது சுற்று ஆட்டத்தில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, உஸ்பெகிஸ்தானின் பொலினா குடர்மெடோவாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஆண்ட்ரீவா, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் பொலினா குடர்மெடோவாவை வீழ்த்தினார்.

இதன் மூலம் மிர்ரா ஆண்ட்ரீவாவும் 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்

SCROLL FOR NEXT