வுஹான்,
போலந்து வீராங்கனை மஜா சுவாலின்ஸ்கா தனது முதல் டபிள்யூ.டி.ஏ. பட்டத்தைக் கைப்பற்றினார்.
வுஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் போலந்து வீராங்கனை மஜா சுவாலின்ஸ்கா, பிரிட்டன் வீராங்கனை சோனே கார்டாலை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதல் செட்டை சோனே கார்டால் 6–2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதற்குப் பதிலடி கொடுத்த சுவாலின்ஸ்கா, அடுத்த செட்டில் 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று ஆட்டத்தைச் சமன் செய்தார். தீர்மானிக்கும் மூன்றாவது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 6–2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றினார்.
இறுதியில், 2–6, 6–4, 6–2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சுவாலின்ஸ்கா, தனது முதல் டபிள்யூ.டி.ஏ. பட்டத்தை வென்று சாதனை படைத்தார்.