டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் அலெக்ஸி பாபிரின் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் அலெக்ஸி பாபிரின் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

சின்சினாட்டி,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னணி வீரரான அலெக்ஸி பாபிரின், பிரான்சை சேர்ந்த கெயில் மான்பில்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த ஆட்டத்தில் பாபிரினுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்திய மான்பில்ஸ் 7-6 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

அதிர்ச்சி தோல்வி கண்ட பாபிரின் முதல் சுற்றோடு நடையை கட்டினார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை