சின்சினாட்டி,
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் வீரர் ஆர்துர் பில்ஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபோவை எதிர்கொண்டா
பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய ஆர்துர் பில்ஸ் 6-3, 1-6, 6-0 என்ற செட் கணக்கில் பிரான்சிஸ் டியா போவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 22 வயதான ஆர்துர் பில்ஸ் 1,000 தரவரிசை புள்ளி கொண்ட மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் பிரான்ஸ் வீரர் என்ற பெருமையை பெற்றார்.