Image Courtesy : AFP  
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இளம் வீராங்கனை எம்மா ராடுகானு அதிர்ச்சி தோல்வி

எம்மா ராடுகானு சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இங்கிலாந்து இளம் வீராங்கனை எம்மா ராடுகானு , அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஆகியோர் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 7-5 ,6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா வெற்றி பெற்றார்.இதனால் எம்மா ராடுகானு சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியிலிருந்து வெளியேறினார்.