சின்சினாட்டி,
சின்சினாட்டி ஓபன் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலாவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவின் கோகோ காப், தனது சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார்.
இறுதிப்போட்டியில் 2 அமெரிக்க வீராங்கனைகள் மோதிய நிலையில், 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பெகுலாவை வீழ்த்தி கோகோ காப் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் சின்சினாட்டி ஓபன் பட்டத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட முறை வென்ற 3-வது வீராங்கனை என்ற பெருமையை கோகோ காப் பெற்றுள்ளார். இதற்கு முன்பு செரீனா வில்லியம்ஸ் மற்றும் விக்டோரியா அஸாரென்கா ஆகியோர் மட்டுமே இந்த சாதனையை படைத்திருந்தனர்.