சியோல்,
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தகுதி சுற்றின் 2-வது ரவுண்டில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதும் ஆட்டம் தென்கொரியா தலைநகர் சியோலில் இன்றும், நாளையும் நடக்கிறது.
இன்று நடைபெறும் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசையில் 367-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் தஷினேஸ்வர், தரவரிசையில் 157-வது இடத்தில் இருக்கும் சூன்வூ குவோனை (தென்கொரியா) எதிர்கொள்கிறார். இரண்டாவது ஒற்றையர் ஆட்டத்தில் தரவரிசை யில் 247-வது இடம் வகிக்கும் இந்திய வீரர் சுமித் நாகல், 549-வது இடத்தில் உள்ள ஹையோன் சுங்குடன் (தென்கொரியா) மோதுகிறார்.
நாளை நடைபெறும் இரட்டையர் ஆட்டத்தில் ஸ்ரீராம் பாலாஜி-நிக்கி போனச்சா (இந்தியா) இணை, தென்கொரியாவின் ஜிசுங் நாம்-உய்சுங் பார்க் ஜோடியை சந்திக்கிறது.
மாற்று ஒற்றையர் ஆட்டங்களில் சுமித் நாகல்- சூன்வூ குவோன். தஷினேஸ்வர்-ஹையோன் சுங் மோதுகின்றனர். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி, 8 அணிகள் இடையிலான இறுதிசுற்றுக்கு முன்னேறும்.