டென்னிஸ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சசிகுமார் விலகல்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியிலிருந்து சசிகுமார் விலகினார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பிடித்து இருந்த சசிகுமார் முகுந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கிறார். இந்த தகவலை இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீசன் அலி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், போர்ச்சுகல் நாட்டில் நடந்த போட்டியில் விளையாடிய போது சசிகுமார் முகுந்த் காயம் அடைந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் இந்திய அணியினருடன் இணைந்து பயணிக்க முடியவில்லை என்றார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு