டென்னிஸ்

துபாய் சர்வதேச டென்னிஸ் - ஜெசிகா பெகுலா சாம்பியன்

சர்வதேச ஒற்றையர் போட்டியில் ஜெசிகா பெகுலா வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

துபாய்,

துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலா, 9-ம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) சந்தித்தார். 1 மணி 12 நிமிடம் நடந்த ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். சர்வதேச ஒற்றையர் போட்டியில் அவர் வென்ற 10-வது பட்டம் இதுவாகும்.

1,000 தரவரிசை புள்ளிகள் கொண்ட போட்டியில் 4-வது பட்டமாகும். அத்துடன் துபாய் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 3-வது அமெரிக்க வீராங் கனை என்ற பெருமையை பெற்றார். மகுடம் சூடிய ஜெசிகா பெகுலாவுக்கு ரூ.6.3 கோடி பரிசாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பெற்ற எலினா ஸ்விடோ லினா ரூ.3.49 கோடியை பரிசாக பெற்றார்.