Image Courtesy: AFP  
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்; காலிறுதிக்கு முன்னேறினார் எலினா ரைபகினா

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா, உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமாக செயல்பட்ட ரைபகினா 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

SCROLL FOR NEXT