image courtesy:twitter/@rolandgarros 
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: பட்டம் வென்ற வீராங்கனைகளுக்கு பரிசுத்தொகை எவ்வளவு..?

மகளிர் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் சாம்பியன் பட்டம் வென்றார்.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கோகோ காப் - சபலென்கா மோதினர்.

இதில் கோகோ காப் 6-7 (5-7), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி முதல் முறையாக பிரெஞ்சு ஓபனை உச்சிமுகர்ந்தார். சபலென்கா 2-வது இடம் பிடித்தார்.

இதில் சாம்பியன் பட்டம் வென்ற கோகோ காபுக்கு ரூ.24.75 கோடியும், 2-வது இடத்தை பிடித்த சபலென்காவுக்கு ரூ.12.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.