image courtesy:PTI 
டென்னிஸ்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ரோகன் போபண்ணா ஜோடி தோல்வி

இந்த தோல்வியின் மூலம் போபண்ணா ஜோடி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியது.

பாரீஸ்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-ஆடம் பாவ்லாசிக் (செக்குடியரசு) ஜோடி ஹென்றி பாட்டன் (இங்கிலாந்து)- ஹாரி ஹெலியோவாரா (பின்லாந்து) இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா ஜோடி 2-6 மற்றும் 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் போபண்ணா ஜோடி நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

SCROLL FOR NEXT