பாரீஸ்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் ஆட்டத்தில் உலக தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள இத்தாலியின் ஜானிக் சின்னர் மற்றும் உலக தர வரிசையில் 56-ம் இடத்தில் உள்ள அர்ஜென்டினாவை சேர்ந்த ஜுவான் மானுவேல் செருந்துலோ விளையாடினர்.
இந்த போட்டியில் முதல் 2 செட்டுகளை 3-6, 2-6 என்ற புள்ளி கணக்கில் சின்னர் எளிதில் வெற்றி பெற்றார். 3-வது செட்டிலும் 5-1 என்ற புள்ளி கணக்கில் சின்னர் முன்னிலை வகித்தபோது, ஜுவானின் அதிரடி ஆட்டம் தொடங்கியது. 7-5 என்ற புள்ளி கணக்கில் 3-வது செட்டை அவர் கைப்பற்றினார்.
இதனால், அடுத்த செட்டை கைப்பற்ற சின்னர் கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆனால், அதில் பலனில்லை. அடுத்த 2 செட்டுகளையும் ஜுவான் கைப்பற்றி சின்னருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தினார். இதனால், போட்டியில் 3-6, 2-6, 7-5, 6-1, 6-1 என்ற புள்ளி கணக்கில் சின்னரை வீழ்த்தி ஜுவான் வெற்றி பெற்றார்.