Image Courtesy: @atptour / @ATPHalle / File Image  
டென்னிஸ்

ஹாலே ஓபன் டென்னிஸ்; ஸ்வேரெவ் காலிறுதிக்கு முன்னேற்றம்

முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

பெர்லின்,

பல முன்னணி வீரர்கள் கலந்து கொண்டுள்ள ஹாலே ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான அலெக்சாண்டர் ஸ்வேரெவ் (ஜெர்மனி), இத்தாலியின் லோரென்சோ சோனெகோ உடன் மோதினார்.

இந்த போட்டியின் முதல் செட்டை 3-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த ஸ்வேரெவ், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை, அபாரமாக செயல்பட்டு 6-4, 7-6 (7-2) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

இறுதியில் இந்த ஆட்டத்தில் 3-6, 6-4, 7-6 (7-2) என்ற செட் கணக்கில் லோரென்சோ சோனெகோவை வீழ்த்திய ஸ்வேரெவ் காலிறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டத்த்ல் ஸ்வேரெவ், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார். 

SCROLL FOR NEXT