டென்னிஸ்

இரட்டையர் பிரிவில் 6-வது முறையாக நம்பர் 1... வரலாறு படைத்த சினியாகோவா

மகளிர் இரட்டையர் டென்னிஸ் வரலாற்றில் தனி முத்திரை பதித்துள்ளார்.

இந்தியன் வெல்ஸ்,

டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்த ஆண்டின் இறுதிக்கான உலகின் நம்பர் 1 வீராங்கனையாக செக் குடியரசின் கேதரினா சினியாகோவா தேர்வாகியுள்ளார். இதன் மூலம், ஆண்டின் இறுதியில் உலகின் நம்பர் 1 இடத்தை 6-வது முறையாகப் பிடித்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஒரே ஆண்டில் 7 பட்டங்கள்

30 வயதான சினியாகோவா, 2026-ம் ஆண்டில் இரட்டையர் பிரிவில் மொத்தம் 7 பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். இதில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்டுடன் இணைந்து 5 பட்டங்களையும், சீனாவின் ஷுவாய் ஜாங்குடன் இணைந்து 2 பட்டங்களையும் கைப்பற்றினார்.

இந்த ஆண்டில் 4 டபிள்யூ.டி.ஏ. 1000 தொடர்களிலும் அவர் சாம்பியன் பட்டம் வென்றார். குறிப்பாக, இந்தியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபன் ஆகிய இரு தொடர்களிலும் தொடர்ந்து வென்று 'சன்ஷைன் டபுள்' சாதனையையும் படைத்தார்.

மேலும், பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன் ஆகிய 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் தொடரின் பட்டத்தையும் கைப்பற்றினார்.

நம்பர் 1

தற்போது இந்தியன் வெல்ஸில் நடைபெற்று வரும் டபிள்யூ.டி.ஏ. இறுதிப்போட்டி தொடரில் டெய்லர் டவுன்செண்டுடன் இணைந்து விளையாடி வருகிறார்.

ஏற்கெனவே 5 முறை ஆண்டின் இறுதியில் உலகின் நம்பர் 1 இரட்டையர் வீராங்கனையாக இருந்த சினியாகோவா, தற்போது 6-வது முறையாக அந்தச் சிறப்பைப் பெற்றுள்ளார். இதன் மூலம் மகளிர் இரட்டையர் டென்னிஸ் வரலாற்றில் தனி முத்திரை பதித்துள்ளார்.

SCROLL FOR NEXT