டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய சபலென்கா, ஸ்வியாடெக்

பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

வாஷிங்டன்,

இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் செக் நாட்டின் கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.