image courtesy: Paula Badosa twitter 
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஸ்பெயின் வீராங்கனை படோசா அரையிறுதிக்கு முன்னேற்றம்..!

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை படோசா அரையிறுதிக்கு முன்னேறினார்.

இண்டியன்வெல்ஸ்,

பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த கால்இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசா மற்றும் ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவா மோதினர்.

1மணி 23 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார் படோசா. நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் படோசா உலகின் நம்பர் 6 வீராங்கனையான மரியா சக்கரியாவுடன் மோத இருக்கிறார்.