image courtesy: twitter/@BNPPARIBASOPEN 
டென்னிஸ்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் இறுதிப்போட்டி: மகளிர் ஒற்றையர் பிரிவில் சபலென்கா - ஆண்ட்ரீவா மோதல்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி இன்று நடைபெற உள்ளது.

இண்டியன்வெல்ஸ்,

இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்து வருகிறது. பல முன்னணி வீராங்கனைகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டிக்கு ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா மற்றும் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அரினா சபலென்கா - ஆண்ட்ரீவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். 

SCROLL FOR NEXT