டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ் தரவரிசை: ரைபகினா முன்னேற்றம்

அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 5-வது இடமும் பிடித்துள்ளனர்.

சென்னை,

சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் தரவரிசை பட்டியலை ஏ.டி.பி வெளியிட்டது. இந்த தரவரிசையில் இண்டியன்வெல்ஸ் ஓபன் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு முன்னேறிய கஜகஸ்தானின் எலினா ரைபாகினா, ஒரு இடம் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.

இந்தப் பட்டியலில் பெலாரசின் சபலென்கா முதலிடத்தில் நீடிக்கிறார். போலந்தின் ஸ்வியாடெக் ஒரு இடம் சரிந்து 3-வது இடமும், அமெரிக்காவின் கோகோ காப் 4-வது இடமும், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 5-வது இடமும் பிடித்துள்ளனர்.