Image Courtesy: AFP  
டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்; அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் முன்னணி வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சபலென்கா 7-5, 6-2 என்ற செட் கணக்கில் டேனியல் காலின்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொள்ள உள்ளார்.

SCROLL FOR NEXT