image courtesy: AFP 
டென்னிஸ்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வியாடெக் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

ரோம்,

பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து) 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் காலிறுதியில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

SCROLL FOR NEXT