ரோம்,
களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோம் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய ஸ்விடோலினா 6-4 , 6-7 (3-7) , 6-2 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.ஸ்விடோலினா மூன்றாவது முறையாக இத்தாலி ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.