புதுடெல்லி,
ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடர் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், கனடாவின் டெனிஸ் ஷபவலோவ் உடன் மோதினார்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7(7)-6 (3), 2-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு சுற்றுக்கு முன்னேறினார். அரையிறுதி சுற்றில் அல்காரஸ், சகா வீரர் ஜேமி முனர் உடன் மோதுகிறார்.