டோக்கியோ,
ஜப்பானில் நடைபெற்று வரும் டோரே பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் தொடரில், கழுத்து வலி காரணமாக நம்பர் 1 வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா காலிறுதிப் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து கனடாவின் லேலா பெர்னாண்டஸ் விளையாடாமலேயே அரையிறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தத் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், உலகின் முதல்நிலை வீராங்கனையான எலினா ரைபகினா, கனடாவின் லேலா பெர்னாண்டஸை எதிர்கொள்ள இருந்தார்.
ஆனால், கழுத்துப் பகுதியில் வீக்கம் மற்றும் வலி இருப்பதால் தன்னால் விளையாட முடியாது எனக் கூறி ரைபகினா போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனை கமீலா ராகிமோவா, ஆஸ்திரேலியாவின் மாயா ஜாயிண்ட்டை 7-5, 5-7, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து அரையிறுதிப் போட்டியில் லேலா பெர்னாண்டஸ், கமீலா ராகிமோவாவை எதிர்கொள்கிறார்.