டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன்: 56 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் மோதும் அமெரிக்க வீராங்கனைகள்

கடைசியாக 1970-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் இரு அமெரிக்க வீராங்கனைகள் மோதினர்.

மேசன்,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் 56 ஆண்டுகளுக்குப் பிறகு இரு அமெரிக்க வீராங்கனைகள் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர்.

ஜெசிகா பெகுலா

அரையிறுதிப்போட்டியில் உலகின் முன்னணி வீராங்கனையான இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்ட ஜெசிகா பெகுலா, கடும் போராட்டத்துக்குப் பிறகு 7-5, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

கோகோ காப்

மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், செக் குடியரசின் சாரா பெஜ்லெக்கை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய காப், 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

56 ஆண்டுகளுக்கு பிறகு

சின்சினாட்டி ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் இரு அமெரிக்க வீராங்கனைகள் மோதுவது 56 ஆண்டுகளுக்கு பிறகு இதுவே முதல்முறை ஆகும்.

கடைசியாக 1970-ம் ஆண்டு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ரோசி கேசால்ஸ் மற்றும் நான்சி ரிச்சி ஆகிய அமெரிக்க வீராங்கனைகள் மோதினர்.