டென்னிஸ்

மீண்டும் சாம்பியன்... குவாடலஹாரா ஓபன் பட்டத்தை தக்கவைத்த இவா ஜோவிச்!

12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

குவாடலஹாரா,

குவாடலஹாரா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் இவா ஜோவிச் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.

ஒரு செட்டையும் இழக்கவில்லை

குவாடலஹாரா ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி மெக்சிகோவில் நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் இவா ஜோவிச் சக அமெரிக்க வீராங்கனையான பேட்டன் ஸ்டீயர்ன்ஸை எதிர்கொண்டார்.

இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய ஜோவிச், முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். சுமார் 46 நிமிடங்கள் நடைபெற்ற முதல் செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இதைத்தொடர்ந்து 2-வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய ஜோவிச், 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார்.

இந்தத் தொடரில் அவர் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் ஒரு செட்டைக்கூட இழக்காமல் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து 2-வது பட்டம்

கடந்த ஆண்டு தனது 17-வது வயதில் இதே குவாடலஹாரா ஓபன் தொடரில் தனது முதல் டபிள்யூடிஏ பட்டத்தை இவா ஜோவிச் வென்றிருந்தார். இந்நிலையில், 12 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அதே தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT