நிங்போ,
சீனாவில் நடைபெற்று வரும் நிங்போ ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் கனடாவின் லேலா பெர்னாண்டஸ் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் லேலா பெர்னாண்டஸ், செக் குடியரசின் மேரி பவுஸ்கோவாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய பெர்னாண்டஸ், 6–3, 7–5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இதன் மூலம் அவர் நிங்போ ஓபன் தொடரின் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.
நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் லேலா பெர்னாண்டஸ், எலினா ரிபாகினா அல்லது டயானா ஷ்னைடர் ஆகியோரில் ஒருவரை எதிர்கொள்ள உள்ளார். மற்றொரு அரையிறுதிப் போட்டியின் முடிவைப் பொறுத்து அவரது இறுதிப்போட்டி எதிராளி யார் என்பது தெரியவரும்.