டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஸ்வெரேவ் வெற்றி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அர்ஜென்டினாவின் மரினோ நவோனியை வீழ்த்தினார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 15-வது இடத்தில் இருக்கும் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-0, 6-1 என்ற நேர்செட்டில் ஜாமிமுனாரை (ஸ்பெயின்) விரட்டியடித்தார். இன்னொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி) 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மரினோ நவோனியை வீழ்த்தினார். மற்ற ஆட்டங்களில் பெலிக்ஸ் அஜெர் அலியா சிம் (கனடா), கரன் கச்சனோவ் (ரஷியா), பிரான்சிஸ்கோ செருன்டாலோ (அர்ஜென்டினா), ஜாகுப் மென்சிக் (செக்குடியரசு), அலிஜான்ட்ரோ டேவி டோவிச் (ஸ்பெயின்) வெற்றி பெற்றனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் 6-2, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் டயனா சினெடெரை (ரஷியா) தோற்கடித்தார். மற்றொரு ஆட்டத்தில் மரியா ஆன்ட் ரீவா (ரஷியா) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் டால்மா கால்பியை (ஹங்கேரி) வெளியேற்றினார். போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் காயத்தால் பாதியில் விலகினார்.