Image Courtesy: AFP  
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: அரினா சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.

மாட்ரிட்,

களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா கஜகஸ்தானின் எலினா ரைபகினா உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 1-6 என்ற புள்ளிக்கணக்கில் இழந்த சபலென்கா அடுத்த இரு செட்களை 7-5, 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் சபலென்கா 1-6, 7-5, 7-6 (7-5) என்ற புள்ளிக்கணக்கில் ரைபகினாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் அரினா சபலென்கா போலந்தின் இகா ஸ்வியாடெக் உடன் மோத உள்ளார்.