image courtesy:twitter/@MutuaMadridOpen  
டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலென்கா அரையிறுதிக்கு முன்னேற்றம்

சபலென்கா அரையிறுதியில் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.

மாட்ரிட்,

ஸ்பெயினில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனயான அரினா சபலென்கா (பெலாரஸ்), மார்டா கோஸ்ட்யுக் (உக்ரைன்) உடன் மோதினார்.

இதில் இரு வீராங்கனைகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. முடிவில் சபலென்கா 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இவர் அரையிறுதியில் எலினா ஸ்விடோலினா உடன் மோத உள்ளார்.