டென்னிஸ்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: சினெர், ரைபகினா போராடி வெற்றி

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கிய ஜானிக் சினெர், பெஞ்சமின் போன்ஜியை வீழ்த்தினார்.

மாட்ரிட்,

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேரடியாக 2-வது சுற்றில் களமிறங்கிய 'நம்பர் ஒன்' வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி) 6-7 (6-8), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் பெஞ்சமின் போன்ஜியை (பிரான்ஸ்) வீழ்த்தினார். ஆயிரம் தரவரிசை புள்ளிகளை வழங்கும் இத்த கைய மாஸ்டர்ஸ் டென்னிசில் அவர் தொடர்ச்சி யாக பெற்ற 23-வது வெற்றி இதுவாகும். சினெர் 3-வது சுற்றில் டென்மார்க் வீரர் எல்மெர் மோலரை சந்திக்கிறார். ஆர்தர் பில்ஸ் (பிரான்ஸ்), மார்ட்டின் எட்செவ்வரி (அர்ஜென்டினா), ஜிரி லெஹக்கா ஆகியோரும் 2-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.

பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 3-ம் நிலை வீராங்கனை கோகோ காப் (அமெரிக்கா) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் லியோலியா ஜியனை (பிரான்ஸ்) வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக் சாம்பியனா கின்வென் ஜாங் (சீனா) 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் சோபியா கெனினை (அமெரிக்கா) துரத்தினார். 2-ம் நிலை வீராங்கனை எலினா ரைபகினா (கஜகஸ்தான்) 4-6, 6-3, 7-5 என்ற செட் கணக்கில் கேப்ரியலா ருசை (ருமே னியா) 2 மணி 28 நிமிடங்கள் போராடி சாய்த்தார்.

கரோலினா பிளிஸ்கோவா, நோஸ்கோவா (செக் குடியரசு), சோன்மெஸ் (துருக்கி), மார்த்தா கோஸ்ட்யுக் (உக்ரைன்), ஆஸ்டாபென்கோவா (லாத்வியா). எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்), அனஸ்டசியா போட்டோபோவா (ஆஸ்திரியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.