டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ் இன்று தொடக்கம்

4-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் இன்று தொடங்குகிறது.

புனே,

4-வது மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனே நகரில் இன்று தொடங்கி வருகிற 6-ந்தேதி வரை நடக்கிறது. தெற்காசியாவில் நடக்கும் ஒரே ஏ.டி.பி. தொடரான இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய தரப்பில் ராம்குமார், யுகி பாம்ப்ரி, பிரஜ்னேஷ் குணேஸ்வரன், அர்ஜூன் காதே ஆகியோர் களம் இறங்குகிறார்கள்.

உலக தரவரிசையில் 15-வது இடம் வகிக்கும் ரஷியாவின் அஸ்லான் கரட்செவ் போட்டித்தரநிலையில் முதலிடத்தை பெற்றுள்ளார். பை சலுகை பெற்றுள்ள அவர் நேரடியாக 2-வது சுற்றில் ஆடுகிறார். நடப்பு சாம்பியனான ஜிரி வெஸ்லியும் (செக்குடியரசு) தனது முதல் ஆட்டத்தை 2-வது சுற்றுடன் தொடங்க உள்ளார்.

இரட்டையர் பிரிவில் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் உள்ள இந்தியாவின் ரோகன் போபண்ணா- ராம்குமார் கூட்டணி முதல் சுற்றில் அமெரிக்காவின் ஜாமி செரேட்டினி- நிகோலஸ் மோன்ரோ இணையை எதிர்கொள்கிறது.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி