பீஜிங்,
சீன ஓபன் டென்னிசில் ஜோகோவிச், அலெக்ஸ் டி மினார் இறுதிப்போட் டிக்கு முன்னேறினர். அரைஇறுதியில் ஆத்திரத்தில் ரசிகர் முகத்தில் பந்தை அடித்த ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டத்தில் 6 முறை சாம்பி யனும், 24 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), முன்னாள் நம்பர் ஒன் வீரரான டேனில் மெத்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் ஜோகோவிச் 7-5. 5-3 என்ற கணக்கில் முன்னி லையில் இருந்த போது, அவர் அடித்த ஒரு பந்தை தவறவிட்டு புள்ளியை இழந்த ஆத்திரத்தில் மெத்வதேவ் கேலரியை நோக்கி பந்தை ஓங்கி அடித்தார். அந்த பந்து முன்வரிசையில் அமர்ந்து இருந்த ரசிகரின் முகத்தில் பலமாக தாக்கியது. வலியால் துடித்த அந்த ரசிகரை சிகிச்சைக்காக ஸ்டேடியத் தில் இருந்து வெளியே அழைத்து சென்றனர்.