image courtesy: Australian open twitter via ANI 
டென்னிஸ்

மியாமி ஓபன் டென்னிஸ்: ரைபகினா அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

மியாமி,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரஷியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் டேனில் மெத்வதேவ், ஸ்பெயின் வீரர் ராபர்டோ கார்பலேஸ் பேனாவுடன் மோதினார். இந்த போட்டியில் டெனில் மெத்வதேவ் 6-1, 6-2 என்ற செட் கணக்கில் கார்பலேசை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா, ஸ்பெயின் வீராங்கனை பவுலா படோசாவுடன் மோதினார். இந்த போட்டியில் ரைபகினா 3-6, 7-5, 6-3 என்ற செட் கணக்கில் படோசாவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

SCROLL FOR NEXT