சென்னை,
மான்டிகார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் ஒற்றையர் காலிறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீரரான ஜானிக் சினெர் 6-3, 6-4 என்ற நேர் செட் டில் கனடாவின் ஆகர் அலியாசிம்மை தோற்கடித்தார்.
அவர் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்திக்கிறார். . இன்னொரு ஆட்டத்தில் கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 6-3, 6-0 என்ற நேர் செட்டில் அலெக்சாண்டர் பப்ளிக்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.